| Specifications |
| Publisher: International Institute Of Tamil Studies, Chennai | |
| Author T. Begum | |
| Language: Tamil | |
| Pages: 137 | |
| Cover: PAPERBACK | |
| 8.5x5.5 inch | |
| Weight 180 gm | |
| Edition: 2022 | |
| ISBN: 9789388972512 | |
| HAD592 |
| Delivery and Return Policies |
| Usually ships in 15 days | |
| Returns and Exchanges accepted within 7 days | |
| Free Delivery |
முனைவர் திருமதி தா.பேகம் அவர்கள் டி.என்.சேசாசலம் அறக்கட்டளைச் சொற்பொழிவில் 'எடுத்துரைப்பியல் நோக்கில் அகநானூற்றுப் பாடல்கள்' எனும் பொருண்மையில் நிகழ்த்திய பொழிவின் எழுத்து வடிவமே இந்நூல்
உலகம் போற்றும் தமிழ்ச் சமுதாயத்தின் செம்மாந்த வாழ்வியலை உள்ளீடாகக் கொண்டவை சங்க இலக்கியங்கள். அவற்றுள், தமிழகத்தின் பண்டைய அரசியல், போர், வரலாறு போன்றவற்றின் குறிப்புகளை உவமைகளின் மூலம் எடுத்தியம்பி அவற்றை அக வாழ்வியல் செய்திகளோடு இயைத்துக் கூறும் தமிழகத்தின் வரலாற்று ஆவணமாகத் திகழ்வது அகநானூற்றுப் பாடல்கள்.
அகநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களில் கபிலரும் ஒருவர். பிரகத்தன் எனும் ஆரிய அரசனுக்குத் தமிழை அறிவுறுத்துவதற்காக, 'குறிஞ்சிப்பாட்டு' எனும் மிகச்சிறந்த அகப்பாடலைப் பாடியதன் மூலம் 'குறிஞ்சிக்கோர் கபிலர்’ எனச் சிறப்பாகக் குறிப்பிடப்பெற்றவர். அவர் காலத்துப் புலவர்களால் 'செறுத்த செய்யுட் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' என்றும், 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்' என்றும் பாராட்டப் பெற்றவர். இத்தகைய, குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவரான கபிலர் பாடிய அகநானூற்றுப் பாடல்களை எடுத்துரைப்பியல் நோக்கில் ஆய்ந்து, அவர்தம் எடுத்துரைக்கும் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் இந்நூல் அமைகிறது.
கபிலர் பாடியனவாக சங்க இலக்கியங்களில் 235 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அப்பாடல்களில் அகப்பாடல்கள் - 197; புறப்பாடல்கள்-38. இப்பாடல்களை நோக்கும்போது அகப்பொருள் பாடல்கள் பாடுவதிலேயே கபிலரின் மனம் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தமை புலனாகிறது.
Send as free online greeting card
Visual Search